உள்ளூர் செய்திகள்

குன்னூர் பகுதியில் கிராமப்புற பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?

Published On 2023-09-21 09:18 GMT   |   Update On 2023-09-21 09:18 GMT
  • கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
  • மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருவங்காடு,

நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகள் மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான மகளிர் தமிழக அரசு சார்பாக இயக்கப்படும் இலவச நகர பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

ஆனால் குன்னூர் பகுதிகளில் 4 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பேருந்துகள் குன்னூர் மவுண்ட் பேஸன்ட் பிளாக் பிரிட்ஜ், சிம்ஸ்பார்க், பெட் போர்டு வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அந்த வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும், அதற்கு பதிலாக சில பேருந்துகளை வேறு பகுதிக்கு இயக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில இந்த பகுதியில் மகளிர் பயணம் செய்ய முடிவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 3 பேருந்துகளும் வரிசையாக நிறுத்தப்பட்டும், ஒரே நேரத்தில் அனைத்தும் இயக்கப்படுவதால் நீண்ட நேரம் மகளிர் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News