உள்ளூர் செய்திகள்

தென்காசி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

Published On 2023-02-21 07:41 GMT   |   Update On 2023-02-21 07:42 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
  • காட்டு யானைகள் மீண்டும் நெல் வயல்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

தென்காசி:

தென்காசி அருகே திரவியநகர், மத்தளம்பாறை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்கதிரில் பால் பிடிக்கும் நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காட்டு யானைகள் கீழே இறங்கி வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

தற்போது மீண்டும் காட்டு யானைகள் நெல் வயல்களில் இறங்கி சேதப்படுத்தி சென்றுள்ளன. மேலும் அருகில் இருந்த வயல்களில் உள்ள வாழை மற்றும் தென்னை மரங்களையும் பிடுங்கி எரிந்து சேதப்படுத்தி உள்ளன.

இதனால் விவசாயி கள் இரவில் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். காட்டு யானைகளை வெடி களை வெடிக்க செய்து விவசாயிகள் விரட்டினாலும் அவை தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News