உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே மகன், மகள்களுடன் மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்

Published On 2023-01-16 14:14 IST   |   Update On 2023-01-16 14:14:00 IST
  • பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை.
  • தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார்.

கடலூர்:

செஞ்சியை அடுத்த பனமலை என்ற ஊரை சேர்ந்தவர் சர்க்கரை மகன் ஏழுமலை (வயது 47). இவரது மனைவி பவானி (39). இவர்களது குழந்தைகள் எழிலரசி (16). 11-ம் வகுப்பு படிக்கிறார். வாணிஷா (13). ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகன் தஷ்வரன்குமார் (6) இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. ஏற்கனவே பவானியை டிசம்பர் மாதத்தில் அதே ஊரைச் சேர்ந்த நபர் வெளியில் அழைத்து சென்றார். இதனை அறிந்த தான் பவானியை அங்கு சென்று அழைத்து வந்தேன். அதே நபர் தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நடராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News