உள்ளூர் செய்திகள்

கணவனை கொல்ல முயன்ற மனைவி கைது

Published On 2023-03-25 15:31 IST   |   Update On 2023-03-25 15:31:00 IST
  • சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
  • கோபமடைந்த ராஜேஸ்வரி ஆவேசமாக சக்திவேலை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தி, கல்லை போட்டு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 பாப்பிரெட்டிபட்டி,

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு பகுதியை சார்ந்தவர் சக்திவேல் (வயது45), இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, சரண்யா என்ற மகளும், சதீஷ்குமார் என்று மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ராஜேஸ்வரி ஆவேசமாக சக்திவேலை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தி, கல்லை போட்டு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன கணவர் அடி வாங்கிய கையோடு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு பொம்மிடி போலீசில் கண்ணீருடன் புகார் தெரிவித்தார்.

புகாரின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News