உள்ளூர் செய்திகள்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை

Published On 2022-09-01 10:34 GMT   |   Update On 2022-09-01 10:34 GMT
  • கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
  • விதைகள் சேதம் அடைந்து, முளைப்புத்திறன் குறைந்து விடும் என விவசாயிகள் வேதனை

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வந்த உடன் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதற்காக நெல் விதைகளை விவசாயிகள் வயல்களில் தெளித்துள்ளனர்.

இந்த விதைகள் முளைத்து வரும் முன்னரே கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று பகல் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டியது.

இதனால் சம்பா தாளடி விதைகள் தெளிக்கப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதில் விதைகள் சேதம் அடைந்து, முளைப்புத்திறன் குறைந்து விடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

Similar News