உள்ளூர் செய்திகள்

நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை என்.ஆர்.தனபாலன் தொடங்கி வைத்த காட்சி.

தசரா நிறைவு நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்டங்கள்- என்.ஆர். தனபாலன் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-07 07:49 GMT   |   Update On 2022-10-07 07:49 GMT
  • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர். தனபாலன் தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியின்போது தந்தையை இழந்த மாணவனின் கல்விக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் நிறைவு நாளையொட்டி பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 7000 பேருக்கு அன்னதானம்வழங்கும் நிகழ்ச்சியை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர். தனபாலன் தொடங்கி வைத்தார்.

உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெ.முத்து தலைமை தாங்கினார். அன்னதானக்குழு ஆலோசகர்கள் கணேசன், சவுந்தரராஜன், கே.டி.முத்து, ராமு, சுந்தரேசபாண்டியன், மகேஷ்வரன், சிவராகவன், ஜெயபால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நெல்லை மாவட்ட செயலர் கண்மணி மாவீரன், ராஜா, மூர்த்தி, பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாரதமாதா நண்பர்கள் அன்னதான குழு நிறுவனத் தலைவர் ஆர்.சுந்தர பாண்டியன் வரவேற்றார்.சிறப்பு ஆழைப்பாளர்களாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலன், ஏஸ்.டி.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று 1000 பேருக்கு தையல் எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், சேலைகள் ஆகியவற்றை வழங்கினர்.தந்தையை இழந்த மாணவனின் கல்விக்கு உதவித் தொகை மற்றும் 7000 பேருக்கு அன்னதானம் ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில், குலசை முத்து உட்பட பாரதமாதா நண்பர்கள் அன்ன தானக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News