உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கிய காட்சி. 

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினர்

Published On 2022-12-05 14:36 IST   |   Update On 2022-12-05 14:36:00 IST
  • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 45 மரக்கன்றுகள் நடப்பட்டது.
  • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தூத்துக்குடி:

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு 14-வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதி நகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர தி.மு.க. துணை செயயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை தாங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்று களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, 300 பேருக்கு சேலை, நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட வழக்க றிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்ட பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், அய்யப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ் குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News