உள்ளூர் செய்திகள்

விஜய் தொழிலாளர் அணி நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் - விஜய் தொழிலாளர் அணி சார்பில் வழங்கப்பட்டது

Published On 2022-06-23 07:16 GMT   |   Update On 2022-06-23 07:16 GMT
  • 500 பேருக்கு அன்னதானம் மற்றும் மாணவஇ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது
  • தளபதி விஜய் தொழிலாளர் அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர் :

நடிகர் விஜய் பிறந்தநாள் விழா மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆலோசனையின்படி திருப்பூர் மாவட்ட தளபதி விஜய் தொழிலாளர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் சதீஷ், அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அங்கேரிபாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு500 பேருக்கு அன்னதானம்மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் அணி செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

விழாவில் குமார், முத்து, சரவணன், வினோத், பிரசாத், தினேஷ் ,வெங்கடேஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News