உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு விழாவில் 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்-காயல்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு

Published On 2022-06-16 09:14 GMT   |   Update On 2022-06-16 09:14 GMT
  • மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்தலுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் அப்துல் அஸ்ஷப் வரவேற்று பேசினார். சாகுல் ஹமீது இறை வணக்கம் பாடினார். நகர பொருளாளர் சுலைமான் அறிக்கை வாசித்தார்.

மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதன்படி புதிய தலைவராக நூஹ் சாகிப், செயலாளராக அபூ சாலிஹ், பொருளாளராக சுலைமான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை காயல் பட்டினத்தில் நடத்துவது, கட்சியின் 75 ஆண்டு விழாவை முன்னிட்டு 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.நிறைவில் முகமது உமர் பிரார்த்தனை பாடினார்.

Tags:    

Similar News