உள்ளூர் செய்திகள்

கடையநல்லூர் ஒன்றியம் இடைகாலில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் வரவேற்பு அளித்தபோது எடுத்த படம்.

கடையநல்லூரில் முதல்-அமைச்சருக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு

Published On 2022-12-09 15:03 IST   |   Update On 2022-12-09 15:03:00 IST
  • தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார்.
  • கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி வழியாக மதுரை சென்றார். அப்போது இடைகால் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் செண்டை மேளம், கரகாட்டம் உட்பட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக இடைகால், கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி வழியாக மதுரை சென்றார். அப்போது இடைகால் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் செண்டை மேளம், கரகாட்டம் உட்பட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான தொண்டர்கள் சாலை நெடுகிலும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடையநல்லூர் ,அட்டைக்குளம் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் வேனில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் எங்கு படிக்கிறாய் என கேட்டு தெரிந்து கொண்டார்.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகர செயலாளர் அப்பாஸ் தலைமையில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் முன்னிலையில் இருபுறமும் தொண்டர்கள், குழந்தைகள் மலர் தூவி வரவேற்றனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன், அக்பர் அலி, வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலையில் செண்டை மேளம், இன்னிசை கச்சேரி, ராஜமேளம் முழங்க இரு புறமும் வாழை மரங்கள் தோரணம் கட்டி கேரள பெண்கள் அணிவகுத்து மலர் தூவி வரவேற்றனர். அதன்பின் அவர் பூரண கும்பம் மரியாதை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் முகமது அலி, சேகனா, யாத்ரா பழனி, நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் முன்னிலையில் ஏராளமானோர் வரவேற்றனர். 

Tags:    

Similar News