உள்ளூர் செய்திகள்

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுமையாக வளர்ச்சி அடைய செயல்படுவோம் - சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பேச்சு

Published On 2023-03-23 08:55 GMT   |   Update On 2023-03-23 08:55 GMT
  • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
  • ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது,

மாப்பிள்ளையூரணி சிலுவைப்பட்டி ஆர்.சி.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைமை வகித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவணகுமார் பேசினார்,

அப்போது அவர் கூறுகையில், மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களை பெற்று ஊராட்சியியை முழுமையாக வளர்ச்சி அடைய செய்வதற்காக செயலாற்றுகிறோம்.

கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று எம்.பி,அமைச்சர் ,எம்.எல்.ஏ, கலெக்டர் என அனைவரின் ஒத்துழைப்புடன் திட்டங்களைப் பெற்று செயல்படுத்துவோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் பெற்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வளர்ச்சி அடைந்த ஊராட்சியாக மாப்பி ள்ளையூரணி ஊராட்சியை மாற்றி காட்டுவோம் என்று பேசினார். ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செ ல்வி,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஒன்றிய கவுன்சி லர்கள் மற்றும் மின்வாரிய அலுவ லகர்கள், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News