உள்ளூர் செய்திகள்

நெல்லை குருந்துடையார்புரம் பகுதியில் இருகரைகளை தொட்டபடி தண்ணீர் செல்லும் காட்சி.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரையை தொட்டபடி செல்லும் தண்ணீர்

Published On 2022-11-18 09:41 GMT   |   Update On 2022-11-18 09:41 GMT
  • வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது.
  • தற்போது பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது.

நெல்லை:

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்த்து. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

அதேசமயம் எதிர்பார்த்த அளவு மலைப்பகுதிகளில் இதுவரை பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 60 முதல் 65 சதவீதம் தான் நீர்மட்டம் உள்ளது.

தற்போது பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது.

இந்நிலையில் இன்று காலை திடீரென நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மஞ்சள் நிறத்தில் சேறு கலந்த தண்ணீர் சென்றது. இதனால் வழக்கம்போல் ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள் வெள்ளம் வந்து விட்டதோ என்று வியப்புடன் பார்த்தனர்.

தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் இருந்து வடிந்து வரும் மழைநீரால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News