உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-12-14 15:26 IST   |   Update On 2022-12-14 15:26:00 IST
  • மலைத்தொடர்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

ஒகேனக்கல்,

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள ஓசூர், அஞ்செட்டி, தேன்கனி க்கோட்டை, நாட்றம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைத்தொடர்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்க ல்லுக்கு நீர்வரத்து அதிகரி த்துள்ளது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News