உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

Published On 2022-12-11 14:57 IST   |   Update On 2022-12-11 14:57:00 IST
  • வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
  • இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிக ளிலும் மழை பெய்து வருகிறது.

இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்க ல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

அதன்படி நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேன க்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்த னர்.

இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News