உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

Published On 2022-11-21 15:06 IST   |   Update On 2022-11-21 15:06:00 IST
  • ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
  • நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பென்னாகரம்,

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணை களில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விட ப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 2-வது நாளாக அதே அளவு தண்ணீர் வந்தது.

இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News