உள்ளூர் செய்திகள்

மெயின் அருவியில் பாறைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை படத்தில் காணலாம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-08-25 15:22 IST   |   Update On 2023-08-25 15:22:00 IST
  • 8,500 கன அடியாக இருந்த நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
  • பயணிகளின் பாதுகாப்பு கருதி 10-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து வருகிறது.

ஒகேனக்கல்,

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது .

இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணை களில் இருந்து கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு 10,900 கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர்வரத்து காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் 8,500 கன அடியாக இருந்த நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து பத்தாவது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து வருகிறது.

Tags:    

Similar News