உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை-இலத்தூர் சாலையில் குழாய் உடைப்பால் வீணாக செல்லும் குடிநீர்.


செங்கோட்டையில் குழாய் உடைப்பால் சாலையில் வீணாக செல்லும் குடிநீர் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-10-22 08:52 GMT   |   Update On 2022-10-22 08:52 GMT
  • தென்காசி மாவட்டம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குழாய் மூலமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, பாவூர்சத்திரம், வழி சுரண்டை நெடுஞ்சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு குழாய் மூலமாக தாமிரபரணிகூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

செங்கோட்டை சன்னதி தெரு நடுமுடுக்கு வழியாக புதூர் பேரூராட்சி பகுதி களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் செல்லும் பைப் லயன் செல்லுகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அங்கு சகதிகாடாக காட்சி யளிக்கிறது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News