உள்ளூர் செய்திகள்

கல்லணை சாலையில் ஆங்கிலத்தில் உள்ள‌ போர்டு.

தமிழில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்க வேண்டும்

Published On 2022-09-07 15:24 IST   |   Update On 2022-09-07 15:24:00 IST
  • ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.
  • தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.பெருகி வரும் வாகனங்களால் சாலைகள் அகலப்படுத்தப்படுவது அவசியமான‌ஒன்று ஆகும்.

இதில் கல்லணை திருவையாறு சாலை (மாநில சாலை எண்22) கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை
அகலப்படுத்தும் பணிகளில் திருச்செனம் பூண்டி வரை முடிந்துள்ளது.

முடிவடைந்த சாலைகளில் வெள்ளைக் கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள் பிரதிபலிப்பானகள் பொருத்தி உள்ளனர்.

சாலை அருகில் பள்ளிகள் வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் பலகைகள் வைத்து உள்ளனர்.

இவை எல்லாம் வரவேற்புக்குரியவை.

அதேசமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலை துறை வண்ணத்தில் வைத்து உள்ளனர்.

அருமையான‌ ஆங்கில‌வாசகங்கள் மட்டுமே இந்த வகையான போர்டுகளில் உள்ளன.

தமிழ் நாட்டில் மாநில‌நெடுஞ்சாலையில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

ஆங்கில மொழியில் வாசகங்கள் வேண்டும் என்றால் இரு மொழி களிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம்.

தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளதை உடனே மாற்றம் செய்து தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

Tags:    

Similar News