உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டிக்கு தேர்வு

Published On 2023-11-21 14:33 IST   |   Update On 2023-11-21 14:33:00 IST
  • சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
  • கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளாத்திகுளம்:

இலங்கையில் நடைபெற உள்ள இண்டோ ஸ்ரீலங்கா சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

வருகிற 24, 25 -ந் தேதிகளில் இலங்கையில் நடைபெற உள்ள இந்த சர்வதேச கராத்தே போட்டிக்கு சோபுகாய் கோஜ்ரியோ கராத்தே- டூ இந்தியா சார்பில் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார் தலைமையில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் பங்குபெறும் மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளி நிர்வாக அலுவலர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News