உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

உழவர் சந்தையில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

Published On 2022-07-23 08:34 GMT   |   Update On 2022-07-23 08:34 GMT
  • ராஜபாளையம் அருகே உழவர் சந்தையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
  • அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சியில் செயல்பாடுகளின்றி காணப்படும் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதையடுத்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. இந்த உழவர்சந்தை வளாகத்தில் ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி தளவாய்புரம் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர சட்ட மன்ற உறுப்பினரான நானும், ஒன்றிய சேர்மனும் முயற்சி எடுத்து வருகிறோம். கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது உழவர் சந்தை. அதனை மீண்டும் புதுப்பித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

அவரது வழியில் தளவாய்புரத்திலுள்ள உழவர் சந்தைக்கு பேவர் பிளாக் தளம், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி யூனியன் சேர்மன் ஒத்துழைப்புடன் உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் தோட்டக்கலை வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி, விற்பனைத்துறை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உதவிப்பொறியாளர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், கிளைச்செயலாளர் தங்கமணி மயிலேறி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News