உள்ளூர் செய்திகள்

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு பெண்கள் உறுதிமொழி ஏற்ற போது எடுத்த படம்.

தாய்பால் வார விழா: பெண்கள் உறுதிமொழி

Published On 2022-08-05 10:12 GMT   |   Update On 2022-08-05 10:12 GMT
  • தாய்பால் வார விழா: பெண்கள் உறுதிமொழி எடுத்தனர்.
  • தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நகர்புற வட்டாரத்தில் வட்டார அளவிலான உலகத்தாய்ப்பால் வார விழா யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி, மருத்துவ அலுவலர்கள் அண்ணாமலை அம்மாள், ராமலட்சுமி, நகர சுகாதார செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையா ளர்கள், வட்டார திட்ட உதவியாளர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,வளர் இளம் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி பேசும்போது, தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் குழந்தையின் பொன்னான 1000 நாள்கள் பற்றி விளக்க உரையாற்றினார்.

கர்ப்ப கால முன், பின் பராமரிப்பு குறித்து மருத்துவ அலுவலர் அண்ணாமலை அம்மாள் பேசினார். விழாவில் காய்கறி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. தாய்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்த பேரணியை மருத்துவ அலுவலர் ராமலட்சுமி தொடங்கிவைத்தார்.

Tags:    

Similar News