உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்

Published On 2023-03-21 14:45 IST   |   Update On 2023-03-21 14:45:00 IST
  • விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
  • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).

நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.

சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News