உள்ளூர் செய்திகள்

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Published On 2023-02-21 14:20 IST   |   Update On 2023-02-21 14:20:00 IST
  • கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
  • அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

24-வது வார்டு மற்றும் 13-வது வார்டு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.

அதற்கு பதிலாக நிலத்தடி நீரை வினியோகம் செய்வதாகவும், இதனால் அதனை குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

முற்றுகை

இதை கண்டித்தும், தாமிரபரணி கூட்டுக்குடி நீரை வினியோகம் செய்ய வலியுறுத்தியும் இன்று 24,13-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News