உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Published On 2022-11-13 12:59 IST   |   Update On 2022-11-13 12:59:00 IST
  • சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
  • படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காதர்ஒலி. இவரது மனைவி பஜ்ராள் பீவி (வயது 52). பஜ்ராள் பீவியின் தங்கை ரசீதா பீவி புளியங்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

உடல்நிலை பாதித்திருந்த அவரை பார்ப்பதற்காக தனது மகன் முகமது அப்சல்கானுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார்.அவரை பார்த்துவிட்டு மாலையில் தங்களின் வீட்டுக்கு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தென்காசி-ராஜபாளை யம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் விலக்கு அருகே வந்து கொண்டி ருந்தபோது தனக்கு தலை சுற்றுவதாக மகனிடம் பஜ்ராள் பீவி கூறியுள்ளார்.இதையடுத்து முகமது அப்சல்கான் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள் பஜ்ராள் பீவி ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி றார்.

Tags:    

Similar News