உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் சந்திப்பு

Published On 2023-08-19 14:21 IST   |   Update On 2023-08-19 14:21:00 IST
  • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் சந்திப்பு கலந்துரையாடினார்.
  • அந்த திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வி ல் முன்னேற வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சியில் 34-வது சந்திப்பு நடந்தது. இதில் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடி னார்.

அப்போது மாணவ-மாணவிகளை லட்சியம், ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி குறித்து கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் இலக்குகளை தேர்ந்தெடுப்ப தில் தெளிவாகவும், விழிப்பு ணர்வோடும் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்து படிப்பிற்கான இலக்குகளை தேர்ந்தெடுப் பதை விட, அடுத்த 30, 40 வருடங்கள் சமூகத்தில் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து இலக்குகளை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாண வர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறி யியல் கல்லூரி, விவசாய கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவி லியர் கல்லூரி உள்ளிட்ட அரசு கல்லூரியில் உயர் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு கள் உள்ளன.

12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்று நல்ல வாயப்பு களை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும் இந்தியாவில் தலைசிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவன சிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியு டனும், கடினமாக உழைத் தால் எளிதாக வெற்றி பெறலாம். மேலும் ஒவ்வொ ருவருக்கும் என்று தனித் திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வி ல் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

Tags:    

Similar News