உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-03-10 07:54 GMT   |   Update On 2023-03-10 07:54 GMT
  • குழந்தைகள் காப்பகத்திற்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர்.

சிவகாசி

சிவகாசி காளீ ஸ்வரி கல்லூரி ஆங்கில த்துறையின் விரிவாக்கப்பணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பிலுள்ள வள்ளலார் இல்லம்- குழந்தைகள் காப்பகத்தில் விரிவாக்கப்பணியை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக ''சிறப்பு மதிய உணவு'' காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தி, வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

மேலும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான எழுதுபொருட்கள், பென்சில் டப்பாக்கள், நோட்டுப் புத்தகங்கள். பென்சில்கள், ரப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்கள், பலசரக்கு பொருட்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் முதலுதவிப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த விரிவாக்கப் பணியில் இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர். இந்த விரிவாக்கப்பணியின் மூலம் மாணவர்களுக்கு சமுதாயத்திலுள்ள பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் தேவைகள் குறித்து விழிப்புணர்வு கிடைத்தது.

ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் சாந்தி, அர்ச்சனாதேவி மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வை வழி நடத்தினர்.

Tags:    

Similar News