உள்ளூர் செய்திகள்

3 குல தெய்வ கோவில்களில் வழிபாடு செய்த கிராம மக்கள்

Published On 2023-05-22 08:36 GMT   |   Update On 2023-05-22 08:36 GMT
  • 3 குல தெய்வ கோவில்களில் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
  • 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பை தலைமை யாக கொண்ட 56 கிராமங் களை சேர்ந்த ஒரே சமு தாயத்தை சேர்ந்த மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர்.

கடந்த 16-ந்தேதி 215 மாட்டுவண்டி களில் குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள் சிவ காசி அருகே எம்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கூட முடையார்அய்யனார் கோவிலுக்கும், சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள மல்லி வீரகாளியம்மன் கோவிலுக்கும், ராஜபாளை யம் அருகே கீழராஜகுல ராமன் கிராமத்தில் உள்ள பொன் இருளப்பசுவாமி கோவிலுக்கும் 3 பிரிவுகளாக பிரிந்து சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

56 கிராம மக்களும் குல தெய்வ தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வருகிற 27-ந்தேதி ஒரே இடத்தில் சந்தித்து அங்கு கிடா வெட்டி விருந்து வைத்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

அதனை தொடர்ந்து 28-ந் தேதி தாங்கள் சென்ற மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் சிவகாசியில் இருந்து புறப்பட்டு வருகிற 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News