உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் அண்ணாமலை பேசியபோது எடுத்தபடம்.

தி.மு.க.வுக்கு தேர்தலில் பொதுமக்கள் பதிலளிப்பார்கள்

Published On 2023-09-07 13:46 IST   |   Update On 2023-09-07 13:46:00 IST
  • தி.மு.க.வுக்கு தேர்தலில் பொதுமக்கள் பதிலளிப்பார்கள்.
  • ராஜபாளையத்தில் அண்ணாமலை பேசினார்.

ராஜபாளையம்

என் மண்,என் மக்கள் என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராஜபாளையத்தில் நடை பயணத்தை தொடங்கி னார். அவர் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அண்ணா மலை பேசியதாவது:-

4 நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மத்தை வேர் அறுப்போம் எனக் கூறுகிறார். சனாதான தர்மம் என்று சொல்லி விட்டால் அவை கிறிஸ்த வர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் எதிரி கிடையாது. அரவணைத்து செல்லக் கூடியது சனாதான தர்மம். ஆன்மீக ஆட்சியில் தான் அனைவரும் நன்றாக இருப்பார்கள்.

தி.மு.க. கடந்த சில நாட்களாக மோடி ஆட்சியை ஊழல் ஆட்சி என கூறி வருகிறது. இதற்கு 2024-ம் ஆண்டு தேர்தலின் போது பொதுமக்கள் பதிலளிப் பார்கள். தமிழக அரசுக்கு மத்திய அரசு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது குறித்து 15 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட் டுள்ளோம்.

சந்திராயன்-3 அனுப்பப் பட்ட நிலாவில் கூட இவ்வளவு குண்டும் குழியும் இல்லை. ஆனால் ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக படு மோசமாக உள்ளது. ராஜ பாளையத்தில் சந்திராயன் விண்கலத்தை இறக்கினால் கவிழ்ந்து விழும் நிலைக்கு சாலை மோசமாக உள்ளது எனவும்

மற்ற நகராட்சிகளை விட ராஜபாளையத்தில் சொத்து வரி மிக மிக அதிகமாக உள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் அதனை தட்டிக் கேட்க வேண்டும்.தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News