உள்ளூர் செய்திகள்

முகாமில் ஒரு இளைஞருக்கு பணி நியமன ஆணையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அருகில் யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகரசபை தலைவி பவித்ரா சியாம்ராஜா உள்ளனர். 

பணி நியமன ஆணைகளை வழங்கிய எம்.எல்.ஏ.

Published On 2022-10-31 08:11 GMT   |   Update On 2022-10-31 08:11 GMT
  • ராஜபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
  • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞ ர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முகாமில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 800 பேர் தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாகாவர்கள் திறமை களை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

ராஜபாளையம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News