உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-06-28 09:30 GMT   |   Update On 2022-06-28 09:30 GMT
  • விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் நடந்தது.

இதில் கலெக்டர் பேசிய தாவது:-

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு தனது 29.10.2021-ந் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலை களை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால், தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால், இந்த ஆலைகளில் பணி யாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் படைக்கலச்சட்ட உரிமத்தின் மீதான தற்காலிக இடைநிறுத்த ஆணைகள் விலக்கி ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர் (18 வயதிற்குட்பட்ட) இருப்பினும், பட்டாசு தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பணிபுரியும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளிலேயே இரவு நேரங்களில் தொழி லாளர்கள் தங்கி இருந்தாலும் உரிமம் நிரந்தமாக ரத்து செய்யப்படும்.

இதை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இனி வரும் காலங்களிலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வுக் குழுக்களின் மூலமாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடு வோர் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News