உள்ளூர் செய்திகள்

 கால்நடை மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-07-01 08:24 GMT   |   Update On 2023-07-01 08:24 GMT
  • சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
  • சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

ராஜபாளையம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில் 1,037 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் பணி, மலடுநீக்க சிகிச்சைப் பணி, தடுப்பூசிப்பணி, சிறு அறுவை சிகிச்சைப்பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சிறப்பு கண்காட்சிகள், பால் தீவனம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விளக்கவுரை, தீவனப்பயிர் கண்காட்சி, ஆவின் பால்பொருட்கள் கண்காட்சி, கால்நடை பண்ணைகள் குறித்து புத்தக கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில் ராஜா, ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ், ஆவின் பொது மேலாளர் ஷைக் முகமது ரபி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News