உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாரை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் பாராட்டினார்.

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு

Published On 2022-10-21 08:08 GMT   |   Update On 2022-10-21 08:08 GMT
  • சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
  • இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான ஜோதி மணி (60), சங்கரபாண்டியன் (65)இருவரும் எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 18.7.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் சிறப்பு படை நியமிக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கொலை வழக்கில் ஜோதி புரம் 7-வது தெருவில் வசிக்கும் தனியார் மில் ஊழியர் சங்கர் (42), அவரது மனைவி பொன்மணி (35) ஆகியோரை கைது செய்தனர்.

ஆசிரியர் தம்பதிகளை சங்கர் பணத்திற்காக கொலை செய்தார். இதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் மற்றும் காவலர்களை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News