உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழா பந்தலுக்கு தீ வைப்பு

Published On 2023-08-14 11:16 IST   |   Update On 2023-08-14 11:16:00 IST
  • விருதுநகர் அருகே கோவில் திருவிழாவில் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
  • கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள உளுத்தி மடை ஊராட்சிக்கு உட்பட்ட பி.வாகைக்குளம் கிராமத்தில் பிறைவுடைய அய்யனார், சுந்தரவள்ளி அம்மன் கோவில் கும்பாபி ஷேகம் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது.

48 நாட்கள் மண்டல பூஜை விழாவையொட்டி கோவில் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு அன்ன தானம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிடாய் வெட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அன்னதான விருந்திற்காக போடப் பட்ட பந்தல் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

இந்த தீ மள மளவென கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து அன்னதான பந்தலுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News