உள்ளூர் செய்திகள்

சிறப்பு விருந்தினர் தணிகைவேல் பேசினார்.

காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் கருத்தரங்கு

Published On 2022-10-31 08:10 GMT   |   Update On 2022-10-31 08:10 GMT
  • சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
  • ‘‘தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்’’ பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "உங்கள் அடையாளத்தை கண்ட றியுங்கள்'' என்ற தலைப்பில் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான சிறுப்புரை நிகழ்ச்சி நடந்தது.

முதலாம் ஆண்டு மாணவி விக்னேசுவரி வரவேற்றார். ஜமுனா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்'' பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

அவர் பேசுகையில், ஒருவர் தனது கையெழுத்தைப் போன்று தனக்கான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் வெற்றிபெற நாம் கவனிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளப்பட வேண்டும். நமக்கான பெயரை உருவாக்க வேண்டும்.

நமக்கென்று ஒரு பெயரை உருவாக்க, நம்மை தனித்து நிற்க வைப்பது எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட திறனை தாண்டி செல்பவர் எவரோ அவரே வெற்றி பெற முடியும். ஒருவர் சுருக்கமாக ''கேட்கும் கோட்பாட்டில்'' கவனம் செலுத்த வேண்டும். தோற்றம், அறிவாற்றல், தீர்வுகள்,நேர ஒழுக்கம், உற்சாகம், புதுமைகள், உணர்வுகள், பலன்கள். தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் சுவாரசியமாக சிறப்புரையாற்றினார்.

முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் பிரவீன் லிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News