உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு

Published On 2023-02-22 08:41 GMT   |   Update On 2023-02-22 08:41 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
  • நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.

வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News