உள்ளூர் செய்திகள்

பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் குறித்து தெரிவிக்க கோரி கலெக்டர் வலியுறுத்தல்

Published On 2022-12-02 07:55 GMT   |   Update On 2022-12-02 07:55 GMT
  • பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.
  • இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல் படுத்தப்பட உள்ளது.

விருதுநகர்

தமிழகத்தில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாத்தல் மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். முதல் கட்டமாக பழைய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் சேகரித்து தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று மதிப்புமிக்க பதிவுகள் நமது செழுமையான தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாற்றும் விதமாக தனி நபர்களிடமிருக்கும் இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

கலாசாரம் மற்றும் பராம்பரியத்தின் பெரிய தடயங்களை கால மாறுதல்கள் மற்றும் மனித அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தனி யார்களிடம் உள்ள பதிவேடு களின் தேசிய பதிவேட்டில் இணைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. பதிவுகள் மேற்கொள்ளும் பொருட்டு கோவை, சேலம், திருச்சி ராப்பள்ளி, கடலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் மாவட்ட பதிவு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தினரிடமோ மற்றும் தனி நபர்களிடமோ பழமையான மற்றும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஏதேனும் இருப்பின் அப்பதிவுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்கள் 04562-252601, 252602, 252603-மற்றும் 9445008161 ஆகியவற்றின் மூலம் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியா ளரை (பொது) தொடர்பு கொண்டும் அல்லது அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரி விக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News