உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகை

Published On 2023-08-29 07:05 GMT   |   Update On 2023-08-29 07:05 GMT
  • அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். அப்போது மகாலிங்கம் என்ற மாணவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலிப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., மாணவர் மகாலிங்கத்தை சந்தித்து கல்வி உதவித்தொகையாக தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தங்கபாண்டியன்

எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறினார். அப்போது தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், சிறந்த முறையில் மருத்துவக்கல்வி பயின்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News