உள்ளூர் செய்திகள்
எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வு
- மாநில சிலம்ப போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டார்.
- தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவிகள் அக்ஷயபுஷ்பா, பவித்ரா சகி முதலிடமும், மாணவிகள் பிரியதர்ஷினி, துர்கா நந்தினி 2-ம் இடமும் பெற்றனர். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களையும் உடற்கல்வி ஆசிரியைகளையும் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளி தலைவர் ஜெயவேல் பாண்டியன், உதவி தலைவர் அஜய், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.