மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
- சாத்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் தூய்மை காவலர்கள் கவுரவிக்கப்பட்டது.
- முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மகாத்மாகாந்தி 154-வது பிறந்த நாளை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசுகையில், உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது? என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது? இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது? என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம் ஆகும்.
நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புதுமைப்பெண் திட்டம் என்பது அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் 3 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.