உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி பாராட்டினார்.

பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை

Published On 2022-06-28 09:32 GMT   |   Update On 2022-06-28 09:32 GMT
  • மென்பொருள் சோதனை போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
  • இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் உலக அளவில் ஐ.இ.இ. சமூகம் சார்பில் அமெரிக்கா விலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறை நடத்திய உலக அளவிலான மென்பொருள் சோதனை (சாப்ட்வேர் டெஸ்டிங்) போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். உலகின் பல்வேறு பகுதிகளின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்க ழகங்களின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர்கள் விஷ்ணுராம், பாலசுப்ரமணியன், டீன் மாரிச்சாமி, கணிப்பொ றியியல் துறைத்தலைவர் ராமதிலகம் ஆகியோர் வாழ்த்தினர்.

இது போன்ற உலக அளவிலான போட்டிகள் மென்பொருள் துறையில் தற்போதைய ஆராய்ச்சிகளையும் அத்துறை சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதோடு மாணவர்கள் உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்ள ஒரு பாலமாக அமைகிறது என்று பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் கூறினார்.

Tags:    

Similar News