உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

Published On 2022-08-21 13:49 IST   |   Update On 2022-08-21 13:49:00 IST
  • சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
  • இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அய்ய னார் (வயது 66), விவசாயி. இவரது தம்பி பச்சையப்பன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அருகருகே உள்ளது.

இந்த நிலையில் அய்ய னார் வயலில் இருந்த வேலியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பச்சையப்பனின் மகன் அய்யனார் (25) பெரியப்பா அய்யனாரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இரவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை அய்யனார் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது தம்பி மகன் அய்யனார் அங்கு வந்து தனது பெரியப்பா வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அய்யனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News