உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசுகள் வழங்கினார்.

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-07-27 08:46 GMT   |   Update On 2022-07-27 08:46 GMT
  • செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.

விருதுநகர்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (28-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது.

இதையொட்டி விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலைய–ரங்கில் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் மேகநாத–ரெட்டி தலைமை தாங்கி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் பேசுகையில், இந்த விளையாட்டில் ஒரு நகர்வில் வெற்றி பெற முடியாது. தொடர்ச்சியாக ஒவ்வொரு படியாக நகர்ந்து, தோல்விகளையும் சந்தித்து தான் வெற்றி பெற முடியும். இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.

எனவே அனைவரும் படிப்பிலும், இது போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுத்திக்கொண்டு தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊர்வலமாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை எடுத்து செல்லப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், கோட்டாட்சியர்கள் கல் ய ா ண குமார்(அருப்புக்கோட்டை), அனிதா(சாத்தூர்), திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News