உள்ளூர் செய்திகள்

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-04-28 13:27 IST   |   Update On 2023-04-28 13:27:00 IST
  • சிவகாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
  • இந்த தகவலை மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவகாசி

சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி அர்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, சிவகாசி அர்பன், காரணேசன் பள்ளி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்கடை முக்கு, தபால் நிலையம், பராசக்தி காலனி ஆகிய பகுதிகளில் இருந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல் வடக்கு ரதவீதி, வேலாயுதரஸ்தா, அண்ணா காலனி, லிங்க புரம் காலனி, ராஜிவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசநகர், பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News