உள்ளூர் செய்திகள்

செட்டியார்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பு

Published On 2022-11-02 08:18 GMT   |   Update On 2022-11-02 08:18 GMT
  • ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
  • பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News