- நரிக்குடியில் வாரச்சந்தை திறக்கப்பட்டது.
- சுற்று வட்டார கிராம மக்கள் சென்றுவர பயண செலவும் அதிகமாகிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் அதனைச்சுற்றி சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கி கள், போலீஸ் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவ லகங்கள் செயல்பட்டு வரு கிறது.
வீரசோழன் கிராமத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு நரிக்குடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சென்றுவர பயண செலவும் அதிகமாகிறது. எனவே நரிக்குடியில் வாரச்சந்ைத அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தற்போது நரிக்குடியில் வாரச்சந்தை திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்ட மைப்பின் தென்மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி காளீஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் சரளாதேவி போஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.நரிக்குடி கிராம தலைவர் கண்ணன் நரிக்குடி வாரச்சந்தையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா கண்ணன் வரவேற்றார்.
விழாவில் ஆண்டியேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வரிசையூர் ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி முத்துக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முனியசாமி, இளைஞரணி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.