உள்ளூர் செய்திகள்

70 வயது முதியவரை அலைகழிக்கும் அதிகாரிகள்

Published On 2023-04-22 14:18 IST   |   Update On 2023-04-22 14:18:00 IST
  • கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
  • கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காளையார்கரிசல் குளத்தை அடுத்துள்ள பொம்மக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சை(வயது70). சோடா கம்பெனி நடத்தி வந்த இவர், தொழில் விருத்தி காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் 20 பவுன் நகையை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றார்.

தவணை முறையில் மாதந்தோறும் பணத்தை கட்டி வந்த ராமர் ரூ.12 லட்சம் வரை செலுத்தியபின் நகையை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டுமென கட்டாயப் படுத்தி உள்ளனர். ஆனால் ராமர் பணம் தர முடியாது என மறுத்து விட்டார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 3 முறை புகார் மனு அளித் துள்ளார். திருச்சுழி, அருப்பு க்கோட்டை துணை சூப்பிரண்டு அலுவலகங்க ளிலும் புகார் அளிக்கப் பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த ராமர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து காப்பாற்றி னர். மேலும் புகார் மனு தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. ராமர் தனது கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

கந்துவட்டி புகார் தொடர்பாக 70 வயது முதியவர் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அலைகழிக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இதுபோன்ற மெத்தனம் காரணமாக பாதிக்கப்பட்ட வர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வாய்ப்பு உண்டு. திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி என்பவரின் புகாரை போலீசார் உரிய நேரத்தில் விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதால் அவர் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News