உள்ளூர் செய்திகள்

தேசிய அறிவியல் தினவிழா

Published On 2023-03-10 07:57 GMT   |   Update On 2023-03-10 07:57 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
  • உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு சொற்பொழிவு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். 3-ம் ஆண்டு மாணவி ஷர்மிளா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் இயற்பியல் துறை தலைவர் ஆசாத் பகதூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மின் தேக்கிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி, வாய்மொழி விளக்கக் காட்சி, பழைய பொருட்களிலிருந்து கலை மற்றும் வண்ணக் கோலங்கள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாலமுருகன் பரிசுகளை வழங்கினார். இரண்டாமாண்டு மாணவி கார்த்திகா நன்றிகூறினார்.

உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News