உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள்மோதல்; ஒருவர் பலி
- மோட்டார் சைக்கிள்கள் மோதி ஒருவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர் அழகாபுரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.