உள்ளூர் செய்திகள்
வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
- வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள துரைச்சாமி புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது58). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை காணாமல் போயிருந்தது.
யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் அருளப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.