உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு செயல்பாட்டை நேரில் ஆய்வு

Published On 2023-06-23 13:47 IST   |   Update On 2023-06-23 13:47:00 IST
  • மகளிர் சுயஉதவிக்குழு செயல்பாட்டை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
  • உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து இத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சந்தித்து கலந்துரை யாடினார். அதன்படி சாத்தூர் நகராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிற்றுண்டி, அமையவுள்ள இடத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் ஸ்வர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஸ்கர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தும் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று சேவு, முறுக்கு உள்ளிட்ட திண் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்டறிந்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

சாத்தூரில் உள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலை கடைகளிலும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News